ரங்கநாத பெருமாள் கோவிலில் வளர்பிறை ஏகாதசி வழிபாடு
ADDED :2723 days ago
பொள்ளாச்சி;ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில், வளர்பிறை ஏகாதசி வழிபாடு நடந்தது.பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், வைகாசி மாத வளர்பிறை ஏகாதசியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவையொட்டி, ஒன்பது வகையான அபிேஷகம் மற்றும் மலர்களால் அலங்கார பூஜைகளும் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்; அன்னதானம் வழங்கப்பட்டது.