திருவேங்கடபெருமாள் சுவாமி திருவிழா கோலாகலம்
எலச்சிபாளையம்: தொட்டிபாளையம், திருவேங்கடபெருமாள் சுவாமி கோவில் திருவிழா நேற்று முடிவடைந்தது. திருச்செங்கோடு அடுத்த, சித்தாளந்தூர் அருகே, தொட்டிபாளையம் திருவேங்கடபெருமாள் சுவாமி கோவிலில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, கடந்த, 25ல் மேல்வாஸ்து சாந்தி, சுதர்ஸன ஹோமம், நவகிரஹ சாந்தி முதலியவை நடந்தது. 26 அதிகாலை, 3:00 மணி முதல் பூஜை, திருக்கோடி தீபம் ஏற்றுதல், மடிப்பழம் கட்டுதல், பெரும்பூஜை, பொங்கல் வைத்தல் நடந்தது. அன்று இரவு, 1:00 மணிக்கு, அலங்கரிக்கபட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் வீதிஉலா வந்தார். நேற்று காலை, 6:00 மணிக்கு நல்லையசுவாமி, வீரமாத்தியம்மனுக்கு முப்போடு எடுத்து வரப்பட்டது. அதன் பின்னர், பக்தர்கள் கிடாக்களை சுவாமிக்கு, பலியிட்டதுடன் திருவிழா நிறைவடைந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.