ஆத்தூர் சிவன் கோவில்களில் வளர்பிறை பிரதோஷ பூஜை
ADDED :2942 days ago
ஆத்தூர்: ஆத்தூர் பகுதியில் உள்ள, சிவன் கோவில்களில், பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், நேற்று, மூலவர், நந்தி சிலைகளுக்கு, மஞ்சள், சந்தனம், தேன், பால் போன்றவை கொண்டு அபிஷேகம் நடந்தது. காயநிர்மலேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன், நந்தி ஆகியோர், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதேபோல், ஆத்தூர் கைலாசநாதர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், வீரகனூர் கங்காசவுந்தரேஸ்வரர், பேளூர் தான்தோன்றீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், பிரதோஷ பூஜை நடந்தது.