உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்யாணராமர் கோவில் ரத உற்சவ விழா

கல்யாணராமர் கோவில் ரத உற்சவ விழா

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, கல்யாணராமர் கோவில், ரத உற்சவ விழா விமர்சையாக நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, தென்கரைகோட்டையில், கல்யாண ராமர், நஞ்சுண்டீஸ்வரர் கோவிலில், ராமர், சீதை மணக்கோலத்தில் இருப்பது சிறப்பம்சமாகும். ராமருக்கு, பட்டாபி?ஷகம் நடந்த நிகழ்வில், உடனிருந்த வசிஷ்ட முனிவர், வாலி, சுக்ரீவன், லட்சுமணன், பரதன் உள்ளிட்ட, 12 பேரும், ராமர், சீதையை சுற்றி இருப்பது போன்ற, சுவாமி சிலைகள் உள்ளன. இங்கு, ஐந்து ஆண்டுகளுக்கு, ஒரு முறை நடத்தப்படும் கல்யாணராமர் ரத உற்சவ விழா, கடந்த, 25ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, கல்யாணராமருக்கு திருக்கல்யாணம் மற்றும் ரத உற்சவ விழா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலுக்கு சொந்தமான ராமர், சீதை, லட்சுமணன், அம்மன், ஈஸ்வரன் ஆகிய, ஐம்பொன் சிலைகள், சேலத்தில் இருந்து, நேற்று முன்தினம் மதியம், 2:30 மணிக்கு, போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. பின், நேற்று மீண்டும், சேலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !