உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பணப்பிரச்னை தீர யானையை பாருங்க!

பணப்பிரச்னை தீர யானையை பாருங்க!

முருகனுக்கு தெய்வானையை  மணம் முடித்த போது, மாமனாரான தேவேந்திரன் சீதனமாக பொன்னும் பொருளும் பரிசளித்தார். அதில் தேவலோகத்திலுள்ள ""ஐராவதம் என்னும் வெள்ளை யானையும் இடம் பெற்றது. இதன் பின் இந்திரனின் செல்வச் செழிப்பு குறைய ஆரம்பித்தது. செல்வத்தின் அடையாள மான ஐராவதம், தன்னை விட்டுப் பிரிந்ததே இதற்கு காரணம் என்பதை உணர்ந்தார் இந்திரன். தன் மருமகன் முருகனிடம் ஆலோசித்து, யானையை தேவலோகம் இருக்கும் கிழக்கு திசை நோக்கி இருக்கச் செய்தார். அதன் பின் இந்திரனிடம் செல்வம் அதிகரித்தது. இதனடிப்படையில் திருத்தணியில் கிழக்கு நோக்கி யானையை அமைத்துள்ளனர். பணப்பிரச்னை  தீர இதை தரிசிக்க செல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !