உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி தேரோட்டம்

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி தேரோட்டம்

மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியூகசுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா மே 21ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழா நடக்கும் பத்து நாட்களும் தினமும் காலை திருப்பல்லக்கு, இரவு பல்வேறு அன்னம், சிம்மம், அனுமார், சேஷ வாகனங்களில் பெருமாள் அருள்பாலித்தார்.  முக்கிய நிகழ்வாக இன்று (மே 29) காலை 6:30 மணிக்கு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்டத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியூகசுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மே 31 தசாவதாரம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை கமிஷனர் நடராஜன் (பொறுப்பு), துணை கமிஷனர் மாரிமுத்து செய்து வருகின்றனர். மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியூகசுந்தரராஜ பெருமாள்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !