உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி பவுர்ணமி: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்

வைகாசி பவுர்ணமி: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்

திருச்சி: திருச்சி, திருவானைக்காவலில், வைகாசி பவுர்ணமி தினமான இன்று, அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. சிவாலயங்கள் அனைத்திலும், ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்படும்.  ஆனால், திருச்சி, ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றங்கரையில் உள்ள திருவானைக்காவலில், ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில் உள்ளது. ஐப்பசி மாதத்தில், காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காலத்தில், கோவில் கருவறைக்குள் தண்ணீர் தேங்கியிருக்கும்.  அதனால், இங்குள்ள சிவலிங்கத்துக்கு மட்டும், வைகாசி மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில், அன்னாபிஷேகம் செய்து, வழிபாடு நடத்தப்படும். அதன்படி,  திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில், இன்று அன்னாபிஷேம் நடக்கிறது.  இன்று பகல் 12.00மணி முதல் மாலை 5மணி வரை அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !