உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொங்கல் விழாவில் பூக்குண்டம் இறங்கிய பக்தர்கள்!

பொங்கல் விழாவில் பூக்குண்டம் இறங்கிய பக்தர்கள்!

வால்பாறை : உருளிக்கல் மேல்பிரட்டு மகாசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் நேற்று காலை பக்தர்கள் பூக்குண்டம் இறங்கினர். வால்பாறை அடுத்துள்ள உருளிக்கல்மேல்பிரட்டு மகாசக்தி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழாவையொட்டி நேற்று முன் தினம் இரவு 1.00 மணிக்கு பூக்குண்டம் வளர்க்கப்பட்டது. காலை 5.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டது. பின்னர் 5.30 மணிக்கு பக்தர்கள் புனித நீராடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அதன் பின்னர் கோவில் அரு ளாளி பூக்குண்டத்தில் பூ உருண்டையை வீசி, அம்மன் அனுமதி பெற்ற பின்னர் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குண்டம் இறங்கினர். பகல் 12.00 மணிக்கு அன்னதானத்தை நகராட்சித்தலைவர் சத்தியவாணிமுத்து துவக்கி வைத்தார். மதியம் 2.00 மணிக்கு பக்தர்கள் புனித நீராடி கோவிலி லிருந்து தீச்சட்டி ஏந்தி கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !