உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லாண்பிள்ளை பெற்றாள் கோவிலில் கருட சேவை

நல்லாண்பிள்ளை பெற்றாள் கோவிலில் கருட சேவை

செஞ்சி: நல்லாண்பிள்ளை பெற்றாள் திருவேங்கடமுடையான் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு கருட சேவை உற்சவம் நடந்தது. செஞ்சி தாலுகா, நல்லாண் பிள்ளை பெற்றாள் திருவேங்கடமுடையான் கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஸ்ரீவைணவ மகா சபையின் சார்பில், 12ம் ஆண்டாக கருடசேவை உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருவேங்கடமுடையானுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் திருவேங்கடமுடையான் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வைணவ மகா சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !