விழுப்புரம் கோவிலில் 21ம் தேதி முதல் பிரவசனம்
ADDED :5048 days ago
விழுப்புரம் : விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் வரும் 21ம் தேதி முதல் விஜய பிரவசனம் நடக்கிறது. விழுப்புரம் வைகுண்டவாச பெரு மாள் கோவிலில் வரும் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை ஸ்ரீஹரி சுவாமிகளின் விஜய பிரவசனம் நடக்கிறது. தொடர்ந்து நாள்தோறும் ஜயதேவர், துளசிதாசர், கபீர்தாசர், புரந்தரதாசர், ஏகநாதர் சரித்திரங்கள், பாண்டுரங்க லீலைகள் பற்றிய பிரவசனம் கூறப்படுகிறது. வரும் 22ம் தேதி காலை 8.30 மணிக்கு உஞ்சவ்ருத்தி, திவ்யநாமம், ராதா கல்யாணம் வைபவம் நடக்கிறது.