உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

திருத்தணி: திருத்தணி ஒன்றியம், நத்தம் கிராமத்தில், புதிதாக முனீஸ்வரர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம், 2ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, முதல் கால யாக பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, கோ பூஜை, நவகிரக சாந்தி தீபாராதனையும், காலை, 11:00 மணிக்கு, சுவாமி கரிகோலம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, இரண்டாம் கால யாகபூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், யாகசாலை பூஜை மற்றும் முனீஸ்வரர் மூலமந்திர ஹோமம் சுவாமி பிரதிஷ்டை பஞ்சமுக ருத்ர ஹோமம் நடைபெறுகிறது. பின், 3ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, மூன்றாம் கால யாகபூஜை, தத்வார்ச்சனை, ருத்ர ஹோமம், மஹா பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு, கலச புறப்பாடும், காலை, 10:00 மணிக்கு, மகா கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !