தேவதானம் கோயிலில் தேரோட்டம்
ADDED :2723 days ago
சேத்துார் : சேத்துார் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் நடந்தது. இதன்விழா மே 19ல் கொடியேற்றத்துடன் துவங்கி தினமும், சுவாமி வீதி உலா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. பெரிய தேரில் பிரியா விடை நாயகியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி மாட வீதிகளில் சுற்றி வந்தார். இதை தொடர்ந்து சிறிய தேரில் தவம் பெற்ற நாயகி அம்மன் எழுந்தருளினார்.இரண்டு தேர்களையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, வீதிகளை சுற்றி நிலைக்கு கொண்டு சேர்த்தனர். தேருக்கு பின் திரளான பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து வழிபட்டனர்.