உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெட்டப்பாக்கம் கோவிலில் சுவர்ண பைரவர் விழா

நெட்டப்பாக்கம் கோவிலில் சுவர்ண பைரவர் விழா

நெட்டப்பாக்கம்: நல்லாத்துார் சொர்ணபைரவர் கோவிலில் இன்று (29ம் தேதி) இரவு 7 மணிக்கு சுவர்ண கிருஷ்ண பைரவ விழா நடக்கிறது.கடலுார் மாவட்டம் நல்லாத்துார் கிராமத்தில் அமைந்துள்ள சுவர்ணபுரீஸ்வரர் கோவிலில் உள்ள சுவர்ண கிருஷ்ண பைரவருக்கு வைகாசி மாத பவுர்ணமியை யொட்டி, இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், தொடர்ந்து தில்லை சித்தர்களால் இயற்றப்பட்ட சுவர்ண பைரவர் அஷ்டோத்ரமும், துர்க்ககை சித்தரால் செய்யப்பட்ட அஷ்டகமும் படிக்கப்பட்டு, மகாதீபாரதனை நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த சுவர்ணகிருஷ்ண அஷ்டகத் பிரிதி பவுர்ணமி பூஜையின் போது, 18 முறை படித்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பண கஷ்டம் தீர்ந்து பண வரவு வரும் என்பது சித்தர் வாக்கு என கூறப்படுகிறது.விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !