உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி விசாகம்: கருட சேவையில் வரதராஜர்

வைகாசி விசாகம்: கருட சேவையில் வரதராஜர்

சேலம்: வசந்த விழா மற்றும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, வரதராஜர் சர்வ அலங்காரத்தில், கருடசேவையில் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்தார். சேலம், பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜபெருமாள் கோவிலில், வசந்தவிழா கடந்த, 21ல் துவங்கியது. 25ல் சூர்ணாபி ?ஷகம், 27ல் லட்சுமி நரசிம்மர் ஊஞ்சல் சேவை ஸாதித்தார். வைகாசி விசாகமான நேற்று காலை, குதிரை வாகனத்தில் பெருமாள் புறப்பாடு கண்டருளினார். மதியம், 12:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்வித்து, ராஜ அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி, கருடசேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 8:00 மணிக்கு வசந்த விழா நிறைவு சாற்றுமுறை பாராயணம் செய்விக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் பட்டாச்சாரியார்கள் ரவீந்திரன், சவுந்திரராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !