உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

* பிறர் நம்மை துன்பப்படுத்தும் போது அதைப் பொறுப்பது மனிதத்தன்மை. மறப்பது தெய்வத்தன்மை.
* உலகிலுள்ள அனைத்தும் கடவுளுக்கு சொந்தமானது. நாம் அனுபவிக்கும் எல்லாவற்றையும் அவருக்கு சமர்ப்பித்த
பின்னரே பயன்படுத்த வேண்டும்.
* கடவுளின் இருப்பிடமான மனதை தூய்மையாக வைப்பது நம் கடமை.    
* உடம்பு தூய்மையாக இருந்தால் போதாது, உள்ளமும் இருக்க
வேண்டும். அதற்கு கடவுளின் திருவடியை எப்போதும் சிந்திக்க வேண்டும்.   
* கடலைத் தேடி ஓடும் நதி போல,  காந்தத்தில் ஒட்டிக் கொள்ளும் ஊசி போல  ஆழ்ந்த பக்தியில் ஈடுபடுங்கள்.
* கடவுளிடம் இருந்து நாம்  பிரிந்து வந்திருக்கிறோம். பக்தி மூலம் மீண்டும் அவரிடம் ஒட்டிக் கொள்ள முயல வேண்டும்.
* கடவுள் எல்லோரிடமும் கருணை காட்டுகிறார். ஆகவே அவரை வணங்குங்கள்.
* தாயாகிய பூமி, நமது விருப்பம் அனைத்தையும் அளிக்க தயாராக இருக்கிறாள். அவளைப் பாதுகாத்து போற்றுங்கள்.
* பக்தி மனதில் வேரூன்றினால் பகைவன் மீதும் அன்புசெலுத்தும் பண்பு வரும்.
* எதிர்பார்ப்புடன் பக்தியில் ஈடுபட்டால் அது வியாபாரமாகி விடும்.
* தியானம் செய்தால் பாவம் நீங்கும்.  நல்ல செயலில் ஈடுபடும் மனநிலை உருவாகும்.    
* நற்செயலில் ஈடுபடுபவர்களைக் கடவுள் ஒருபோதும் கைவிட மாட்டார்.
* குறுக்கிடும் கஷ்டத்தை எண்ணிக் கலங்க வேண்டாம். சகிப்புத் தன்மையுடன் பொறுத்துக் கொள்ளுங்கள்.
* மகிழ்ச்சி வெளியில் இருப்பதாக மனிதன் எண்ணுகிறான். மகிழ்ச்சி என்பது அவரவர் மனதைப் பொறுத்தே உண்டாகிறது.    
* எளிமை, உழைப்பு இரண்டும் மனிதனை மனநிறைவோடு  வாழ வழிகாட்டும் நற்பண்புகள்.   
* ஆசையால் கோபம் உண்டாகிறது. அது பாவம் செய்யத் தூண்டுகிறது.
* பிறருடைய குற்றத்தை அன்பினால்  திருத்தும் போது மட்டுமே நிலையான பலன் கிடைக்கும்.
* தேவைகள் அதிகரித்துக் கொண்டே சென்றால் அதற்கேற்ப வாழ்வில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். - வழிகாட்டுகிறார் காஞ்சிப்பெரியவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !