திருப்பரங்குன்றம் கோயிலில் மொட்டையரசு திருவிழா
ADDED :3019 days ago
திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மொட்டையரசு திருவிழா நடந்தது. இக்கோயிலில் மே19 சுவாமிகளுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கிய திருவிழாவில் தினமும் இரவு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். நேற்று முன் தினம்
பால்குட உற்ஸவம் நடந்தது. நேற்று காலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனை முடிந்து தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாக மொட்டையரசு திடலில் எழுந்தருளினர். பக்தர்களின் திருக்கண் மண்டபங்களில் அருள்பாலித்து, இரவு 11:00 மணிக்கு பூப்பல்லக்கில் சுவாமி கோயில் திரும்பினார்.