உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் பொங்கல் விழா

விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் பொங்கல் விழா

விருதுநகர் : விருதுநகர் பராசக்திவெயிலுகந்தம்மன்கோயில் பொங்கல்விழா மே 22 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் அம்மன் ரிஷபம், குதிரை வாகனங்கள் மற்றும் பல்லக்கில் வீதி உலா வந்தார். நேற்று நடந்த பொங்கல்விழாவில் விருதுநகர் மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் பலர் அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைதொடர்ந்து பல்சுவை கதம்ப நிகழ்ச்சி, குதிரை வாகனத்தில் அம்மன் நகர்வலம் வருதல் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியாக இன்று கயிறுகுத்து, அக்னிசட்டி, கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், பல்வேறு வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவர். இரவில் அம்மன் ரிஷபவாகனத்தில் நகர்வலம் வருதல், நாளை(மே31) தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !