உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரம் வைகை ஆற்றில் இறங்கிய வரதராஜப் பெருமாள்

எமனேஸ்வரம் வைகை ஆற்றில் இறங்கிய வரதராஜப் பெருமாள்

பரமக்குடி : பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங் கினார். இக்கோயிலில் வைகாசி பவுர்ணமி வசந்தோத்ஸவ விழா நேற்று முன்தினம் காலை 9:30 மணிக்கு அபிேஷகத்துடன் துவங்கியது. பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக் கோலத்துடன் பூப் பல்லக்கில் அலங்காரமாகி வைகை ஆற்றில் இறங்கினார். காலை 11:00 மணிக்கு பெருமாள் குதிரை வாகனத்தில் மேலச் சத்திரத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 6:00 மணிக்கு திருச்சப்பரத்தில் எழுந்தருளினார். இரவு 12:00 மணிக்கு வண்டியூரை அடைந்த பெருமாள் இன்று, இரவு 7:00 மணிக்கு சேஷ வாகனத்தில் மாணிக்கா மண்டகப்படியில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !