உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐ.பி.எல்., கோப்பைக்கு பூஜை

ஐ.பி.எல்., கோப்பைக்கு பூஜை

சென்னை: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில், சென்னை அணி, சாம்பியன் பட்டம் வென்றது. இதை த்தொடர்ந்து, சென்னையில், ரசிகர்களை சந்திக்கஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம், மும்பையில் இருந்து, விமானம் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், சென்னை விமானநிலையம் வந்தனர். நேற்று மாலை, சென்னை , அடையாறில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் தங்கி, தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், அணி வீரர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், தி.நகர், வெங்கடநாராயணா சாலையில் உள்ள , திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், ஐ.பி.எல்., வெற்றி கோப்பை , எடுத்து செல்லப்பட்டது. அங்கு, கோப்பைக்கு, துளசி மாலை அணிவித்து, பூஜை செய்யப்பட்டது. இந்நிகழ்வில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த சீனிவாசன், அந்த அணியின் முதன்மை செயல் அதிகாரி, காசி விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !