சோழவந்தான் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா
ADDED :2723 days ago
சோழவந்தான், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் பால்குடம், அக்னிசட்டி எடுத்து ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இத்திருவிழா மே 21 கொடியேற்றத்துடன் துவங்கி 17 நாட்கள் நடக்கிறது. தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஒன்பதாவது நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தியும், கரும்பு தொட்டி கட்டியும் நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு பூப்பல்லக்கு நடந்தது. இன்று (மே 30 ) பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி லதா மற்றும் பலர் செய்துள்ளனர். சன்மார்க்க சங்கத்தினர் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கினர்.