உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் தேரோட்டம்

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் தேரோட்டம்

காரைக்குடி : தென் திருப்பதி என அழைக்கப்படும் அரியக்குடி அலர்மேல் மங்கை உடனுறை திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்தார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 7:30 மணிக்கு திருவேங்கடமுடையான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேருக்கு எழுந்தருளினார். மாலை 5:15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. 6:15 மணிக்கு மேல் தேர் நிலையை வந்தடைந்தது. காரைக்குடி, ரஸ்தா உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அறங்காவலர் தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் பாலதண்டாயுதம் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !