பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக விழா
ADDED :2719 days ago
கீழக்கரை : ஏர்வாடி முத்தரையர் நகரில் மச்சாவதார பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விழாவை முன்னிட்டு காப்புகட்டுதலுடன் விழா துவங்கியது. பால்குடம், அலகு குத்தி காவடி எடுத்து ஊர்வலமாக பக்தர்கள் வீதியுலா வந்தனர்.மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை நடந்தது.பெண்கள் பொங்கலிட்டனர். அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி பரமாத்மா ராமநாதன் செய்திருந்தார்.