கீழப்பாவூர் நரசிம்மருக்கு இன்று சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை!
ADDED :5047 days ago
திருநெல்வேலி : கீழப்பாவூர் நரசிங்க பெருமாள் கோயிலில் இன்று சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை நடக்கிறது. கீழப்பாவூரில் நரசிங்க பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தற்போது பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணி வேலைகள் நடந்துவருகிறது. சுவாதி நட்சத்திர பூஜையை முன்னிட்டு இன்று (17ம் தேதி) மாலை 4.30 மணிக்கு நரசிம்மருக்கு அபிஷேக ஆராதனை மற்றும் விஷேச பூஜைகள் நடக்கிறது.