சிறுகடம்பூர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
செஞ்சி: சிறுகடம்பூர் கங்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்க உள்ளது. செஞ்சி சிறுகடம்பூரில் உள்ள பழமையான கங்கையம்மன் கோவில் திருப்பணிகள் செய்து புதுப்பித்து மகா கும்பாபிஷேகம் நாளை நடக்க உள்ளது. இதை முன்னிட்டு இன்று (31ம் தேதி) மாலை 10:00 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 6:00 மணிக்கு வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷாபந்தனம், கலச ஆவாகனம், கலச பிரதிஷ்டை மற்றும் யாகசாலை பூஜையும், மகா தீபாரதனையும், இரவு 9:00 மணிக்கு சிலை பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் செய்ய உள்ளனர். நாளை அதிகாலை 5:30 மணிக்கு கோபூஜை, மூலமந்திர பாராயணம், பிம்பசுத்தி, நாடி சந்தனம், தம்பதி பூஜை மற்றும் மகா பூர்ணாஹூதியும், காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடும், 8:30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், 9:30 மணிக்கு மகா அபிஷேகமும் செய்ய உள்ளனர். விழா ஏற்பாடுகளை சிறுகடம்பூர் கிராம பொது மக்கள் செய்துள்ளனர்.