உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மழை வேண்டி வர்ணஜபம்

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மழை வேண்டி வர்ணஜபம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மழை வேண்டி வர்ணஜபம் நடந்தது. கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில்‚ திருக்கோவிலுார் பகுதியில் கோடை மழை இல்லாமல் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். விவசாயிகளை மிகவும் பாதித்துள்ளனர். இதனால் மழை வேண்டி, தெற்கு வீதி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில்‚ நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 8:00 மணிக்கு‚ ஆர்யவைசிய சமூக தலைவர் சர்வேஸ்வரன் தலைமையில்‚ பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்தொடர்ந்து கோவில் அர்ச்சகர் முரளிதர சுவாமிகள் வசந்த வாசலில்‚ அரசமர மைதானத்தல் தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் அமர்ந்து‚ கடம் ஸ்தாபனம் செய்யப்பட்டு‚ மூன்று மணி நேரத்திற்கு வர்ணஜபம் செய்தார். இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !