திருக்கழுக்குன்றம் தேருக்கு மேற்கூரை பணிகள் நிறைவு
ADDED :2721 days ago
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் தேருக்கு மேற்கூரை அமைக்கும் பணி நிறைவடைந்தது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், ஏப்., 20ல் துவங்கி, 30ம் தேதி வரை, சித்திரை பெருவிழா கொண்டாடப்பட்டது. பிரதான விழாவான தேரோட்டம், 26ல் நடந்தது. மாவட்டத்திலேயே, ஐந்து தேர் வரும் உற்சவமாக, இக்கோவிலில் நடத்தப்பட்டது. இதற்காக பயன்படுத்தப்பட்ட சிற்பக்கலையுடன் உள்ள தேர்களை, இரும்பால் ஆன தகரத்தால் மூடி, பாதுகாக்கும் பணி, 20 நாட்களுக்கு முன் துவங்கியது.தற்போது, பணிகள் முடிந்து, தேர் முழுமையாக மூடப்பட்டு, பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுஉள்ளது.