உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாக்கியம்மன் கோவில் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

சாக்கியம்மன் கோவில் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

கிருஷ்ணகிரி: சூளகிரி அடுத்த, பி.கொத்தப்பள்ளி கிராமத்தில், சாக்கியம்மன் கோவில் திருவிழா நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள, பி.கொத்தப்பள்ளி, உல்லட்டி, மணியங்கல், மூக்கண்டப்பள்ளி ஆகிய, கிராம மக்கள் ஒன்றிணைந்து, பி.கொத்தப்பள்ளியில், சாக்கியம்மன் கோவில் திருவிழாவை நடத்தினர். கடந்த, 25 முதல், தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று, பெண்கள் மாவிளக்கு எடுத்தல், பல்லக்கு ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, குரும்பர் இன மக்கள், தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். கரக மாலையை, கங்கையில் சேர்த்தல், சம்பூர்ண பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !