உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி 2வது ரோப்கார் மழை, காற்றிலும் இயங்கும்

பழநி 2வது ரோப்கார் மழை, காற்றிலும் இயங்கும்

பழநி, பழநி மலைக்கோயிலில் இரண்டாவது ரோப்கார் ரூ.72கோடியில், பிரான்ஸ் நாட்டு போமா ரோப்வே நிறுவனம் மூலம் அமைக்கப்பட உள்ளது.இப்பணிகள் 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒருபெட்டியில் 15 பேர் செல்லலாம். 2 நிமிடங்களில் மலைக்கோயிலுக்கு சென்றடைய முடியும். மழை, காற்றின் போது பெட்டியில் கண்ணாடியை ஏற்றிக்கொள்ளலாம். பக்தர்கள் ஒருபக்கம் ஏறி, மறுபக்கம் இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ரோப்கார் பலத்த காற்று, மழை பெய்தால் நிறுத்தப்படுகிறது. இந்த குறைபாட்டை நீக்கும் வகையில், இரண்டாவது ரோப்கார் அமைக்கப்படுகிறது. ஜூன் முதல் வாரத்தில் பணிகள் துவங்க உள்ளது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !