உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரம் கோவிலில் ஞானசம்பந்தர் குரு பூஜை

கண்டாச்சிபுரம் கோவிலில் ஞானசம்பந்தர் குரு பூஜை

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் திருஞானசம்பந்தர் கோவிலில் குருபூஜை நடந்தது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழாவையொட்டி, மூலவர் ராமநாதீஸ்வரர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு தீபாராதனைகள் நடந்தன. பின்னர் சமய குறவர்கள் நால்வருக்கும், ஞானசம்பந்தருக்கும் சிறப்பு அலங்காரத்துடன், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன்,பாலகிருஷ்ண சிவாச்சாரியார் மற்றும் 63 நாயன்மார்கள் மன்றத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !