கொஞ்சிமங்கலம் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
ADDED :2722 days ago
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு: கொஞ்சிமங்கலம் ஸ்ரீதேவி பூதேவி திருவேங்கட சீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. கிளியனுார் அடுத்த கொஞ்சிமங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத திருவேங்கட aவிழாவை முன்னிட்டு, கடந்த 28ம் தேதி மாலை பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், கருட சேவையில் வீதியுலா நடந்தது.
தொடர்ந்து 29ம் தேதி ஸ்ரீ ராமர் அலங்காரமும், அனுமன் சேவையும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் ஸ்ரீதேவி பூதேவி திருவேங்கட சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. இரவு தாயார், பெருமாள் மரகத பல்லக்கில் வீதியுலா நடந்தது. நேற்று மாலை 6:00 மணிக்கு மேல், சக்கரத்தாழ்வார், தாயார், பெருமாள் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம், தீர்த்தவாரி மற்றும் விடையாற்றி உற்சவம் நடந்தது.