உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செகுட்டையனார் கோயிலில் புரவியெடுப்பு விழா

செகுட்டையனார் கோயிலில் புரவியெடுப்பு விழா

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடி கோயில்பட்டி செகுட்டையனார் கோயிலில் புரவியெடுப்பு விழா நடந்தது. புரவிகள் செய்வதற்காக மே 18ல் கிராமத்தார்கள் சார்பில் பிடிமண் கொடுக்கப்பட்டது. சூரக்குடி புரவி பொட்டலில்வைத்து š2 அரண்மனை புரவிகள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட புரவிகள் செய்யப்பட்டன. புரவிகளுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மே 31ல் கச்சேரி திடலுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு சாமியாட்டம் நடந்தது. நேற்று புரவியெடுப்பு ஊர்வலம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு சாமியாட்டம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு புரவி புறப்பட்டது. சிறைமீட்ட அய்யனார் கோயிலுக்கு ஒரு அரண்மனை புரவியும், செகுட்டையனார் கோயிலுக்கு மற்றொரு அரண்மனை புரவியும் சென்றது. இவற்றின் பின்னால் நேர்த்திக்கடன் புரவிகள் சென்றன. இரவு 7:00 மணிக்கு புரவிகள் கோயிலை சென்றடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !