சீதேவி அம்மன் கோவில் தேரோட்டம்
ADDED :2724 days ago
பெருந்துறை: சீதேவி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. பெருந்துறை அடுத்த, காஞ்சிக்கோவில், சீதேவிஅம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவில், நேற்று முன்தினம், தீ மிதிக்கும் நிகழ்வு நடந்தது.தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. விநாயகர் மற்றும் சீதேவி அம்மன் தேர்களை, நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். காஞ்சிக்கோவில் முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. தேர்கள் நிலை திரும்பும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. ஏற்பாடுகளை, காஞ்சிக்கோவில் ஸ்ரீ சீதேவிஅம்மன் நல அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.