பிரம்மோற்சவ விழா: கஜ வாகனத்தில் ஸ்ரீனிவாசப்பெருமாள் வீதியுலா
ADDED :2724 days ago
கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில். இக்கோவிலில், பிரம்மோற்சவ விழா, கடந்த 26ம் தேதி மாலை, கருட பிரதிஷ்டையுடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடக்கின்றன. விழா நாட்களில், தினமும் ஒவ்வொரு வாகனத்தில், சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நேற்று கஜ வாகனத்தில் ஸ்ரீநிவாஸப் பெருமாள் வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள தரிசனம் செய்தனர். ஜூன் 6ல் விழா நிறைவடைகிறது.