சோழவந்தானில் தேரோட்டம்: மின்கம்பிகளால் தேர் சேதம்
ADDED :2650 days ago
சோழவந்தான், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. தாசில்தார் பார்த்திபன், ஏ.டி.எஸ்.பி., நரசிம்மவர்மன், டி.எஸ்.பி., மோகன்குமார், இன்ஸ்பெக்டர்கள் பாலாஜி,முத்துபாண்டி உள்ளிட்டோர் தேர்வடத்தை பிடித்தவுடன், பக்தர்கள் தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் தேரை இழுக்கசிரமப்பட்டனர். மின்கம்பிகளால் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தேரின் அலங்கார பகுதி சேதமானது. இதனால் ஒரு மணிநேரம்தாமதமாக தேர் நிலைக்கு வந்தது. ரதவீதிகளில் மின் கம்பங்களை அகற்றி, மின்ஒயர்களை தரையில் பதிக்கும்திட்டம் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால் 2 ஆண்டுகளாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் ஆண்டு தோறும் தேர் சேதமடைவது தொடர்கிறது.