ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தேர் புதுப்பிப்பு
ADDED :2651 days ago
ராமேஸ்வரம்: 300 ஆண்டுக்கு பிறகு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூபாய் 7.50 லட்சத்தில் சுவாமி, அம்மன் திருத்தேர் புதுப்பிக்கப்படுகிறது. ராமேஸ்வரம் கோயிலில் மாசி, ஆடி தேரோட்ட விழாவின் போது சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் அலங்கரித்த திருத்தேரில் எழுந்தருளி கோயில்ரதவீதியில் உலா வருவர். 300 ஆண்டு பழமையான இத்தேரில் சக்கரம், சிம்மாசனம் சேதமடைந்து இருந்ததால் தேரை புதுப்பிக்க பக்தர்கள் கோரினர். இருதேரில் சேதமடைந்த பகுதியை அகற்றி ரூபாய் 7.50 லட்சம் செலவில் தேக்கு மரத்தில் தேரில் சிம்மாசனம் பொருத்தி, புதுப்பிக்கப்பட்டது. தற்போது புதுப்பொலிவுடன் காணப்படும் இரு திருத்தேரும் ஆடி, மாசி தேரோட்டத்தில் கம்பீரமாக வீதி உலா வரும் என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.