ஏகநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: புனிதநீர் சுமந்து பக்தர்கள் ஊர்வலம்
விருத்தாசலம்: விருத்தாசலம் ஏகநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மணிமுக்தாற்றில் இருந்து யானை மூலம் புனிதநீர் ஊர்வலமாக வந்தது. விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏகநாயகர் கோவிலில் வரும் 10ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 10:00 மணிக்கு மேல் மணிமுக்தாற்றில் இருந்து புனிதநீர் கலசத்தை யானை சுமந்து வர, அதனுடன் பக்தர்கள் இணைந்து புனிதநீர் கலசங்கள் சுமந்து ஊர்வலமாக வந்தனர். நிகழ்ச்சியில், ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர்கள் அகர் சந்த், சுரஷே் சந்த், ரமஷே் சந்த், தொழுதுார் ஆறுமுகம் கல்விக் குழும தலைவர் ராஜபிரதாபன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுந்தரராஜன், வழக்கறிஞர் மெய்கண்டநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். வரும் 10ம் தேதி காலை 6:00 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜை, 9:25 மணிக்கு கடம் புறப்பாடாகி காலை 10:30 மணிக்கு மேல் விமான கலசத்தில் புனிநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடக்கிறது.