உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூக்குழி இறங்கிய 2,500 பக்தர்கள்

பூக்குழி இறங்கிய 2,500 பக்தர்கள்

பழநி, பழநி அருகே வேலுார் மண்டுகாளியம்மன் கோயில் பூக்குண்டம் திருவிழாவில் 2,500 பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபட்டனர். பழநி நெய்க்காரப்பட்டி பேரூராட்சி வேலுார் மண்டுகாளியம்மன்கோயில் பூக்குண்டம் இறங்கும் விழா ஆண்டுதோறும் நடக்கிறது. இந்தாண்டு விழாவை சண்முகநதி தீர்த்தம் எடுத்துவந்து அம்மனுக்கு அபிேஷகம் செய்தனர். நேற்று அதிகாலை 2,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். மாவிளக்கு, அக்னி சட்டி, பால்குடங்கள், அலகு குத்தியும், நெய்க்காரப்பட்டி, ஆர்.வாடிப்பட்டி, அ.கலையம்புத்துார், பாப்பம்பட்டி, சின்னகலையம்புத்துார் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிப்பட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !