ரமலான் சிந்தனைகள்-22: சுய காலில் நில்லுங்கள்
ADDED :2692 days ago
மனைவி வீட்டில் பொருள் வாங்கும் ஆண்களை நபிகள் நாயகம் ஆதரிக்கவில்லை என்பது அவரது கருத்தில் இருந்து தெரிய வருகிறது.“ஒரு பெண் தன் கணவனின் வீடு, சொத்துக்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். திருமணத்துக்கு பிறகு கணவன் வீட்டையே தன் வீடாக கருத வேண்டும். கணவனின் மரியாதையையும் கவுரவத்தையும் அதிகப்படுத்துவதில் ஈடுபட வேண்டும். கணவனின் சொத்தைக் கொண்டு வீட்டை அழகுபடுத்துங்கள்,” என்கிறார். கணவனின் சொத்தைக் கொண்டு வீட்டை அழகுபடுத்துங்கள் என சொல்வதன் மூலம், கணவன் தனது பணத்தையே மனைவியிடம் வீட்டை அழகுபடுத்துவது, வசதியைப் பெருக்குவது உள்ளிட்டவற்றை செய்து கொள்ள வேண்டும் என்பது தெளிவாகிறது.மாமனார் வீட்டில் பொருள் வாங்குவதை இனியாவது தவிருங்கள். சுயகால்களில் நிற்க பழகுங்கள்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:44 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்:அதிகாலை 4:15 மணி.