உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்-23: தற்பெருமை பேசாதீர்கள்

ரமலான் சிந்தனைகள்-23: தற்பெருமை பேசாதீர்கள்

உங்கள் வீட்டில் தொடர்ந்து சந்தோஷமான சம்பவங்களே நடக்கிறது. அதை  தற்பெருமையுடன் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறீர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நிச்சயமாக ஒரு இடி காத்திருக்கும். சந்தோஷ சம்பவங்கள் நடக்க நடக்க, பிறரை சீண்டிப் பார்க்கும் எண்ணம் உருவாகும். பணம் இருப்பவன் அடுத்தவனை கொடுமை செய்து பார்ப்பதில் மகிழ்வான். வலிமையுள்ளவன் இன்னொருவனை அடித்து மகிழ்வான். அழகுள்ளவள் அழகில்லாத மற்ற பெண்களை கேலி செய்து சந்தோஷப்படுவாள். உங்கள் மகிழ்ச்சி எல்லை மீறியும், மற்றவர்களை இம்சைப்படுத்துவதாகவும்  இருப்பது கூடாது என்கிறார் நாயகம். “என் உயிர் எவன் (இறைவன்) வசம் உள்ளதோ, அவன் மீது ஆணையாக சொல்கிறேன். நான் அறிந்தவற்றை நீங்கள் அறிந்து கொண்டால், அதிகமாக கண்ணீர் வடிப்பீர்கள். குறைவாகவே சிரிப்பீர்,” என்றார் அவர்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:44 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:15 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !