உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகாசூரனுக்கு செல்லாத்தூரில் கும்பம்

பகாசூரனுக்கு செல்லாத்தூரில் கும்பம்

ஆர்.கே.பேட்டை : செல்லாத்துார் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், நேற்று முன்தினம், பகாசூரனுக்கு கும்பம் படைக்கப்பட்டது. நேற்று திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, செல்லாத்துார், திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, 10 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, பகாசூரன் கும்பம் நிகழ்ச்சியுடன் தெருக்கூத்து துவங்கியது. செல்லாத்துார் மற்றும் ஆர்.கே.பேட்டையில் வீதி வலம் வந்த பகாசூரனுக்கு பக்தர்கள் கும்பம் படைத்தனர். அன்று இரவு, 10:00 மணியளவில், தெருக்கூத்து நிகழ்ச்சி துவங்கியது.முதல் நாளில், வில் வளைப்பு கூத்து நடத்தப்பட்டது. நேற்று, அதிகாலை வரை நடந்த, தெருக்கூத்து முடிவில், பிராமனர் வேடம் தரித்து அஞ்சாத வாசம் மேற்கொண்டிருந்த பாண்டவர்களில், அர்ச்சுனன், வில் வளைப்பு நிகழ்ச்சியில் வெற்றி பெற்று,திரவுபதியம்மனை மணம் முடித்தார்.தொடர்ந்து, வரும், 16ம் தேதி வரை, தெருக்கூத்து நடைபெற உள்ளது. வரும், திங்கட்கிழமை மாலை, அர்ச்சுனன் தபசு நடக்கிறது.அதை தொடர்ந்து, 17ம் தேதி, காலை, துரியோதனன் படுகளமும், அன்று மாலை, தீமிதி திருவிழாவும் நடைபெறும். திருவிழாவை ஒட்டி, திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !