கோடி நமசிவாய யாக பூஜை
ADDED :2690 days ago
திருப்பூர்; திருப்பூர் ஜப யக்ய கமிட்டி சார்பில், கோடி நமசிவாய யாக பூஜைகள் நடந்தன. விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், யாக பூஜையும், சிவலிங்க பூஜையும் நடந்தது. காலை, 6:00 மணிக்கு, கணபதி ேஹாமம், ருத்ர ஏகாதசனீ வேள்வி, 8:00 மணிக்கு, சிவலிங்க பூஜை நடந்தன.வேள்வியில், கோடி நமசிவாய பூஜையும் நடந்தது. பரமானந்த பாரதி சுவாமிகள் தலைமையிலான குழுவினர், வேள்வி பூஜை நடத்தினர்.