திண்டிவனம் கர்ணாவூர் முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
திண்டிவனம்:கர்ணாவூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
திண்டிவனம் அடுத்த கர்ணாவூர் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு,, கடந்த 8 ம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமங்களுடன் விழா நிகழ்ச்சிகள் துவங்கியது. தொடர்ந்து 9ம் தேதி விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பிரவே சம், மூலமந்திர ஹோமம் நடந்தது.
நேற்று (ஜூன் 11)ல் காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், பூர்ணாஹூதியும் நடந்தது.
இதன் தொடர்ச்சியாக காலை 10:05 மணிக்கு, மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் முன்னிலையில், விமான கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், காலை 10:15 மணிக்கு, மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, மகா கும்பாபி ஷேகமும் நடந்தது.
விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கர்ணாவூர் ஆசிரியர் துளசிதாஸ், ஜக்காம்பேட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராஜூ மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.