நாமக்கல் மாவட்டத்தில்,கோவில் பாதுகாப்பு பணி: மாஜி வீரர்களுக்கு அழைப்பு
ADDED :2690 days ago
நாமக்கல்: மாவட்டத்தில், கோவில் பாதுகாப்பு பணியில், 36 காலிப்பணிடங்கள் நிரப்பப்பட உள்ளன. முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித் துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில் பாதுகாப்பு பணியில், 36 பணியிடங்கள் காலியான உள்ளன. அப்பணியிடங்கள், முன்னாள் படைவீரர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளன.
விருப்பமுள்ளவர்கள், நாமக்கல், முன்னாள் படைவீரர் நலன், உதவி இயக்குனரை நேரில் சந்தித்து, உரிய விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.