நாமக்கல் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :2711 days ago
நாமக்கல்: வைகாசி கிருத்திகை நாள் விழாவை முன்னிட்டு, முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. நாமக்கல் - மோகனூர் சாலை, பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், காலை, 8:00 மணிக்கு கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. மூலவர் பாலதண்டாயுத பாணிக்கு, 32 நறுமணப் பொருட்கள் கொண்டு, அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு செவ்வரளி, வெள்ளை ரோஜா, செம்பருத்தி மற்றும் மல்லிகை உள்ளிட்ட மலர்களால் மாலைகள் அணிவிக்கப்பட்டு, ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், உற்சவர் பாலதண்டாயுதபாணி சுவாமி, வள்ளி தெய்வானையுடன் வெண்பட்டு உடுத்தி, கல்யாண சுப்ரமணியர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.