ஏகாம்பரநாதர் கோவிலில் உழவார திருப்பணி
ADDED :2711 days ago
காஞ்சிபுரம்: தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில், முதல் தலமாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில், சிவனடியார்கள், உழவாரப்பணியினர் சார்பில், அவ்வப்போது, உழவாரப்பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஈஷா தன்னார்வ தொண்டர்கள், தென் கைலாய பக்தி பேரவை, சிவபக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் என, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற உழவாரப்பணி நடந்தது. கோவில் வளாகம் மற்றும் பிரகாரங்கங்களை, சிவ பக்தர்கள் சுத்தப்படுத்தினர்.