தேவிபட்டினம் தீர்த்தக்குளத்தை தூர்வார பக்தர்கள் கோரிக்கை
ADDED :2710 days ago
தேவிபட்டினம்:தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாணம் அமைந்துஉள்ளது. இந்த நவ பாஷாணத்தில் பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்ய பக்தர்கள் வந்து செல்கின்றனர்.பக்தர்கள் கடலுக்குள் அமைந்துள்ள நவகிரகத்தை சுற்றி வந்து கடல் நீரில் குளித்து நவபாஷாணம் எதிரே உள்ள சக்கர தீர்த்தக்குளத்தில் நீராடுவது வழக்கம். வறட்சியால் சக்கர தீர்த்தக்குளம் வறண்டுஉள்ளதுடன்,குளத்தில் கழிவு தேங்கியுள்ளன. குளத்தில் உள்ள கழிவுகளை அகற்ற சம்பந்தபட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.