திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்
ADDED :3010 days ago
கிள்ளை: கிள்ளை அடுத்த கீழ் அனுவம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம் நடந்தது. அதனையொட்டி, கடந்த மாதம் 28ம் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. கடந்த 1ம் தேதி திருக்கல்யாணமும், நேற்று முன்தினம் மாலை நடந்த தீ மிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.