உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி அமாவாசை: அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா அபிஷேகம்

வைகாசி அமாவாசை: அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா அபிஷேகம்

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு,  உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையாருக்கு (உற்சவமூர்த்தி) சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு,  உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையாருக்கு (உற்சவமூர்த்தி)  பல்வேறு வகையான மூலிகை பொடி,  பஞ்சாமிர்தம்,  108 லிட்டர் தேன்,  108 லிட்டர்  நெய், 1008 லிட்டர் பால் மற்றும், மாம்பழம் சாறு, கரும்பு சாறு, சந்தனம், 208 லிட்டர் தயிர் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின் ஏராளமான வண்ண பூக்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !