திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் கோடை உற்சவம்
ADDED :2708 days ago
திருவள்ளூர்: நுாற்றி எட்டு திவ்ய ஸ்தலங்களில் ஒன்றான வீரராகவர் கோவிலில், 12ம் தேதி கோடை உற்சவம் துவங்கியது. வைகாசி மாதத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் கோடை உற்சவமும் ஒன்று. கோடை உற்சவத்தின், 3ம் நாளான இன்று, பெருமாள், தாயார் திருமஞ்சனம், மாலை பெருமாள் தாயார் உள்புறப்பாடும் நடைபெறுகிறது. இன்றுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. நேற்று, அமாவாசை முன்னிட்டு, மூலவர் தரிசனம், விடியற்காலை, 5:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை நடைபெற்றது. கண்ணாடி அறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவரை, காத்திருந்து பக்தர்கள் வழிபட்டனர்.