ஸ்ரீவி.,யில் தினமும் ஆண்டாளை வலம்வந்து வணங்கிவிட்டு உணவு உண்ணும் யானை
ADDED :2775 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு, பாரததேச வைஷ்ணவர்கள் சார்பில், திருக்கோஷ்டியூர் சவும்ய நாராயண எம்பெருமானார் அறக்கட்டளை மூலம், ‘ஜெயமால்யதா’ பெண் யானை வழங்கப்பட்டுள்ளது. இந்த யானை ஸ்ரீவில்லிப்புத்தூரில் தினமும் காலையில் ஆண்டாளை சுற்றி வலம்வந்து வணங்கிவிட்டு, பின்னர் உணவு சாப்பிடுவதை பழக்கமாக கொண்டுள்ளது. யானை ஜெயமால்யதாவை பக்தர்கள் தினமும் தரிசனம் செய்து வருகின்றனர்.